ஈல்கானரசு என்பது மங்கோலியப் பேரரசின் தென்மேற்குப் பகுதியாக நிறுவப்பட்ட ஒரு கானரசு ஆகும். இக்கானரசு மங்கோலியர்களால் குலாகு உளூஸ் என்றும் அலுவல் ரீதியாக ஈரான்சமீன் என்றும் அழைக்கப்பட்டது. ஈரான்சமீன் என்பதன் பொருள் ஈரானின் நிலம் ஆகும். இது மங்கோலிய குலாகுவின் குடும்பத்தால் ஆட்சி செய்யப்பட்டது. குலாகு என்பவர் செங்கிஸ் கானின் பேரனும் டொலுயின் மகனும் ஆவார். 1260இல் தன் அண்ணன் மேங்கே கான் இறந்த பிறகு மங்கோலியப் பேரரசின் மத்திய கிழக்குப் பகுதியை குலாகு பெற்றார். மேலும்...
த சாத்தானிக் வெர்சஸ் என்ற சர்ச்சைக்குரிய புதினத்தின் ஆசிரியர் சல்மான் ருஷ்டி (படம்), அமெரிக்காவில் ஒரு நிகழ்வில் உரையாற்றிய போது கத்தியால் குத்தப்பட்டுப் படுகாயமடைந்தார்.
பரிசல் என்பது அதிக ஆழம் இல்லாத நீரில் செலுத்தும், மூங்கிலால் வேயப்பட்ட வட்ட வடிவ படகு கலம். பரிசல் பெரும்பாலும் அதிக விரைவில் நீரோடாத ஆறுகளிலும் அமைதியாய் உள்ள நீர்நிலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,47,984 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.